"பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்குவதே பொதுசிவில் சட்டம் .." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 
mk stalin

தமிழ்நாட்டில் திராவிடமாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெற்று வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசிய போது, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது.. இதே போல் இந்திய நாட்டிற்கும் ஒரு ஆட்சி தேவை. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது பாஜக.

MK Stalin

பாஜக கொள்கைகள், பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்குவதே பொதுசிவில் சட்டத்தின் நோக்கம். பாஜகவின் கொள்கைகளை பரப்பவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது;பாஜகவை எதிர்ப்பவர்களை ஒடுக்கவே பொது சிவில் சட்டம்; பொது சிவில் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம் சென்றாலும் பிரதமருக்கு திமுக ஞாபகம்தான் வருகிறது.

MK Stalin

இன்று வள்ளலார் குறித்து ஒருவர் பேசி கொண்டு வருகிறார்.. பேசிக்கொண்டு கூட இல்லை, புலம்பி கொண்டுள்ளார், உளறி கொண்டு உள்ளார். அவர் யார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும்." என்றார்.