திமுக எங்களுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது - சண்முகம் பரபரப்பு பேட்டி

 
சண்முகம் சண்முகம்

திமுக எங்களுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம். என்ற தேர்தல் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டுதான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருமளவு வாக்களித்து உள்ளார்கள். இந்த விவகாரத்தில் நிதி நிலையை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.

கொடிக்கம்பகளை அகற்றும் விவகாரத்தில் தோழமைக் கட்சிகளுடன் திமுக கலந்து பேசி இருக்க வேண்டும். தன்னிச்சையாக திமுக முடிவெடுத்தது, எங்களுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது என கூறினார்.