`சொசைட்டி பரிதாபங்கள்' - பரபரப்பு புகார்

 
அ அ

கோபி, சுதாகர் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கார்த்திக் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்

Image

இரு சமூகத்தினர் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் ‘பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை ஆணவப்படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை சித்தரித்துள்ளதாகவும், இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசி இருப்பதாகவும் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கார்த்தி என்பவர் பெயரில் புகார் மனு அளித்துள்ளார். கோபி, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பரிதாபங்கள் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.