’இளம் பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக்’ அவதூறு பரப்பிய திருச்சி சிவா மீது புகார்

 
திருச்சி சூர்யா

நானும், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்களும் பேசிய தனிப்பட்ட அலைபேசி உரையாடல்களையும், புகைப்படங்களையும் திருடி, தன்னுடைய x" தளத்தில் வெளியிட்டு, அவதூறு பரப்பும் திருச்சி சூர்யா (எ) மணிவண்ணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இடும்பாவனம் கார்த்தி காதலி மோனிஷ் ராய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்தி - YouTube

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோனிஷ் ராய்  அளித்துள்ள புகார் மனுவில், “வணக்கம். நானும், இடும்பாவனம் கார்த்திக் என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் நேசித்து பழகி வருகிறோம். திரு.இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளையும், தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறைகளையும் எடுத்துக்காட்டி, பல்வேறு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் விவாதங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றில் பங்குகொண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதனால், அரசியல்ரீதியாக அவருக்கு எதிரிகள் உருவாகுவதுடன், ஒரு சில அரசியல் எதிரிகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொய் செய்திகளையும், ஆபாசமான கருத்துகளையும் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், 18.07.24 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்களின் மகன் திருச்சி சூர்யா என்கிற மணிவண்ணன், அவருடைய ×' தளத்தில், 'இளம் பெண்ணை கர்ப்பம் ஆக்கி ஏமாற்றிய இடும்பாவனம் கார்த்திக்' எனும் தலைப்பிட்டு, 2 நிமிடங்கள் 56 வினாடிகள் ஓடக்கூடிய குரல் பதிவில், 1 நிமிடம் 26 வினாடிகள் முதல் 2 நிமிடம் 56 வினாடிகள் வரை பல மாதங்களுக்கு முன்பு நானும், திரு.இடும்பாவனம் கார்த்திக் அவர்களும் பேசிய அலைபேசி உரையாடல்களை வெளியிட்டுள்ளார். இந்த மேற்கண்டப் பதிவை இலட்சணக்கணக்கானோர் பார்த்தும், கேட்டும், மறுபதிவிட்டும் வருகின்றனர். அந்தப் பதிவின் விமர்சனப்பிரிவில் பல்வேறு நபர்கள் ஆபாசமான கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். மேலும், மற்றொரு பிரிவில், 'அண்ணனை மிஞ்சிய தம்பிகள்' எனும் தலைப்பில் என்னுடைய அனுமதியில்லாமல் என்னுடைய புகைப்படங்களையும், அதில் பொய்யான செய்திகளையும் பதிவிட்டுள்ளார். அவர் இந்த உரையாடல்களை நாம் தமிழர் கட்சி மீதும், திரு.இடும்பாவனம் கார்த்திக் மீதுமுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கிடையே அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் மேற்கண்ட எங்கள் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடலை போன் ஹேக்கிங் (Phone Hacking) மூலம் திருடியோ, பிறரின் அலைபேசியிலுள்ள உரையாடல்களை திருடியோ தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை திருட்டுத்தனமாக கைப்பற்றி பொதுவெளியில் வெளியிட்டதன் மூலம் பெண்கள் ஆபாசமாகச் சித்தரிக்கும் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிந்துள்ளார். மேலும், என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இணையதள சேவையைப் பயன்படுத்தி என்னை இணையதளத்தில் வழியாகப் பயமுறுத்தியும், கொடுமைப்படுத்தியும் (Cyber Bullying Of Women) தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்துள்ளார். மேலும், இந்த மேற்கண்ட திருச்சி சூர்யா (எ) மணிவண்ணன் என்கின்ற நபர் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் அலைபேசியில் இருந்து எடுக்கப்பட்ட குரல் பதிவுகள் என்றுகூறி தொடர்ச்சியாக தன்னுடைய '' தளத்தில் பதிவிட்டு வருகிறார். இதன்மூலம், இவர் பல்வேறு அரசியல் பிரமுகர்களை மிரட்டியும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு தொடர் குற்றவாளி என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற இணையதளக் குற்றங்களை அரசியல் காரணங்களுக்காகவும், பிறரின் புகழைக் கெடுக்கும் நோக்கத்துடன் அதன்மூலம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து இதுபோல் செயல்படக்கூடும் என்ற அச்சம் உள்ளது.


எனவே, என்னுடைய தனிப்பட்ட உரையாடல்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்துள்ளார். எனவே, மேற்கண்ட திருச்சி சூர்யா என்கிற மணிவண்ணன் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவருடைய 'X' தளத்தில் பதிவிட்டுள்ள என்னுடைய உரையாடல் அடங்கியப் பதிவை முற்றிலும் நீக்கிட தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்