திருமாவளவன் பற்றி அநாகரீக பேச்சு- திருச்சி சூர்யா மீது புகார்
திருமாவளவன் பற்றி அநாகரீகமாக பேசிய திருச்சி சூர்யா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் அளித்துள்ள புகார் மனுவில், “மேற்படி விலாசத்தில் குடும்பத்துடன் நான் வசித்து வருகிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் இருந்து வருகிறேன். தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளா2 நாடாருளின் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இயக்கமாக தமிழக மக்களுக்காக களத்தில்இருந்து வருகிறோம்.
மது கட்சித் தலைவர். திரு.தொல் திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றி வருகிறார். நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய எங்கள் தலைவரைப்பற்றி MGR TV எனும் வலைதளத்தில் திருச்சி சூர்யா என்பவர் எழுத்தால் எழுத முடியாத அளவிற்கு அநாகரீகமாகவும் ரூ.200 கோடி பணம் பெற்றார் என எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பி வருகிறார். தலித் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில் மேற்படி சமூக வலைதளத்தில் பேசியுள்ளார். இதை பார்த்த எமக்கு மன உலரச்சலாக உள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் என பலரும் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் சமூக பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே ஐயா அவர்கள் மேற்படி நபர் திருச்சி சூர்யா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைகொசெய்றே கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.