“ரூ.10 லட்சம் கொடு”- அண்ணாமலையின் பெயரை சொல்லி பாஜகவினர் மிரட்டுவதாக புகார்

 
ச் ச்

பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.கவினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளயிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கோவை மாவட்டம், அன்னூர் - குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ம் ஆண்டு விபத்தில் உயிரிந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று 50 லட்ச ரூபாய் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜ் நாகமணி தம்பதியின் இளைய மகன் அருணாச்சலம் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் தனது சகோதரன் உயிரிழந்த நிலையில் , அதே ஊரை சேர்ந்த பா.ஜ.கவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் வழக்கு நடத்த உதவி செய்தனர் எனவும் , இழப்பீடு வந்தவுடன் , அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்சம் ரூபாய்  கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் , தேர்தல் வருகின்றது என்பதால் செலவுக்கு பணம் வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர்  அண்ணாமலை பெயரை சொல்லி, பா.ஜ.கவை சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன் ஆகியோர்  மிரட்டுவதாகவும், மேலும் 10 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இளைஞர்  அருணாச்சலம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது...