அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!!

 
Annamalai Annamalai


தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

annamalai

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். கடந்த 12.04.2024 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர்.

mutharasan

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.