PSBB பள்ளி மீது குவியும் புகார்கள் : அரசே எடுத்து நடத்த கோரிக்கை!

 

PSBB பள்ளி மீது குவியும் புகார்கள் : அரசே எடுத்து நடத்த கோரிக்கை!

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் மாணவிகளின் பாலியல் புகார்கள் குவிந்துவரும் நிலையில், மேலும் 2 சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

PSBB பள்ளி மீது குவியும் புகார்கள் : அரசே எடுத்து நடத்த கோரிக்கை!

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் துறையில் ஆசிரியராக இருந்த இவர் மீது பல முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ராஜகோபாலன் உண்மையை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முகமது முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ராஜகோபாலன் வருகின்ற 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த விவகாரத்தில் விசாரணை செய்து முழு அறிக்கை அனுப்புமாறு தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் ஆசிரியர் ராஜகோபால் மீது மேலும் பல புகார்கள் குவிந்து வருகிறது.

PSBB பள்ளி மீது குவியும் புகார்கள் : அரசே எடுத்து நடத்த கோரிக்கை!

இந்நிலையில் PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் மட்டுமின்றி, பத்ம சேஷாத்ரி பள்ளி மீதான வருமான வரி ஏய்ப்பு , நிதி முறைகேடு, ஆசிரியர்கள் ஊதிய முறைகேடு உள்ளிட்ட மற்ற புகார்களையும் விசாரிக்க வேண்டுமென தனியார் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த பள்ளியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.