நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விசிக ஆர்ப்பாட்டம்

 
thiruma

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Nanguneri

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது சகோதரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

thiruma

இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது  ட்விட்டர் பதிவில், "மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி சந்திராசெல்வி ஆகியோர்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வரும் 21-ம்தேதி விசிக சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வரும் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.