கூடுதல் பொறுப்பு - முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்

 
TN

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார். அமலாக்க துறையின்  கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இரண்டு மூன்று நாட்களில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.

stalin
இதன் காரணமாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்களுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையையும் பிரித்து வழங்கி  தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அத்துடன் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத(Ministerwithout portfolio)அமைச்சராகத் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

TN

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ,  கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறை வழங்கப்பட்டதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோல்  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர்  சு. முத்துசாமி கூடுதல் பொறுப்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வழங்கப்பட்டதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.