சிபிஆருக்கு அண்ணாமலை வாழ்த்து!
Updated: Sep 12, 2025, 11:20 IST1757656211290
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், நமது நாட்டின் 15 ஆவது துணைக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சிபிஆருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராகவும், மாநில ஆளுநராகவும் தனது மக்கள் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட சிபிஆர் பெருமைமிகு துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றவும், மாநிலங்களவைத் தலைவராக, நாட்டைச் சிறப்பாக வழிநடத்தவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.


