கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் - குகேஷுக்கு தினகரன் வாழ்த்து!!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் போட்டியில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்ததற்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.