வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம் - செல்வப்பெருந்தகை வாழ்த்து..!

 
1 1

செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

50 வருடங்களை அவர் நிறைவு செய்திருந்தாலும் இப்போதும் சலிப்பில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினிகாந்தை வாழ்த்துகிறோம். இன்னும் பலப்பல விருதுகளைப் பெற்று திரையுலகிலும் புகழுடன் வாழ விரும்புகிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.