“பீகாரில் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது”- காங்கிரஸ் குழு தீவிர ஆலோசனை
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தேசிய காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

குறிப்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கோவாவைச் சேர்ந்த, அகில இந்திய காங்., செயலர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சூரஜ் ஹெக்டே கூடுதல் பொறுப்பாளர், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் மேலிட கூடுதல் பொறுப்பாளர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "காங்கிரஸ் கட்சி சங்கத்தன் அபியான் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி பல்வேறு நிர்வாகிகள் அடங்கிய குழு மாவட்ட வாரியாக சென்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள். இதில் மாவட்டத்தின் நிலைமை குறித்தும் வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் செய்ய வேண்டியது குறித்தும் கருத்துக்களை பெறுவார்கள். இது தொடர்பாக விரிவான அறிக்கை மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமனம் செய்வது தொடர்பாகவும் அறிக்கை அளிப்பார்கள். வரும் 9 தேதிக்குள் அனைத்து மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இன்று அனைத்து மூத்த தலைவர்களுடன் 5 நபர் கொண்ட குழு ஆலோசனை நடத்தியது. எங்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை அறிந்து கொண்டு கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பீகார் மாநில தேர்தல் வெற்றி தமிழகத்தில் எடுபடாது. அங்கு தேர்தல் ஆணையம் பீகார் மக்களை தோற்கடித்தது, தமிழகத்தில் அது எடுபடாது" என்றார். க்ஷ்ழ்


