காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

 
evks

உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளாங்கோவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு லேசான நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் அவர் நலமுடன் உள்ளார் எனவும், ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். 

evks

இந்நிலையில், ஈவிகேஸ் இளங்ககோவனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. லேசான தொற்றுடன் ஈவிகேஸ் இளங்ககோவன் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் வீடுதிரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென அவரது உடல்நிலை மோசமானதால்  மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.