புயல் பாதிப்பு - தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

 
மிக்ஜாம் புயல்

தமிழ்நாடு காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என ஸ்ரீவில்லிப்புதூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

காங். தலைவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய இடைவெளி உள்ளது!'' -  ஒப்புக்கொள்கிறார் செல்வப் பெருந்தகை | `In Congress There is a lot of space  between leaders and people ...


இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. 

மழை

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபட்டு, படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.