”அண்ணாமலைக்கு தலைமை பண்பு கிடையாது; அவர் ஒரு தரமான தலைவரே கிடையாது”

 
 அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தலைமை பண்பு என்பது கிடையாது, அண்ணாமலை ஒரு தரமான தலைவரே கிடையாது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் இடையே பைத்தியக்காரத்தனம் தலைவிரித்து ஆடுகிறது”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் 72 வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,  அவரது 72 வயதை குறிக்கும் வகையில் அதே எடை கொண்ட 72 கிலோ  கேக் ஆனது தயார் செய்யப்பட்டது. அதனை தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் ஆல்போன்ஸ்,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கியும், மதிய உணவு விருந்தும் அளிக்கப்பட்டது.

விழாவில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே எஸ் அழகிரி பொறுப்பேற்ற பிறகு மிகச் சிறப்பாக கட்சியை நடத்தி வருகின்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும் மிகச் சிறப்பாக செயலாற்றி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியடைய செய்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு அடுத்த படியாக அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சியை வெற்றி அடையச் செய்தார். வாழப்பாடி ராமமூர்த்திக்கு பிறகு அதிக ஆண்டுகள் தலைவராக பதவி வகிப்பவர் கே.எஸ்.அழகிரி. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு முன்பு தமிழகம் பெற்றிடாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெரும், இதற்கு காரணமாக அழகிரி அமைவார்.

சோனியா பற்றி சீமான் விமர்சனம்: கைது செய்ய டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தலைமை பண்பு என்பது கிடையாது. அண்ணாமலை ஒரு தரமான தலைவரே கிடையாது, அரசியலில் சுத்தமற்றவர், கர்நாடகாவில்  பணியாற்றும் போது கன்னட மக்களுக்கு உழைப்பவன் என்று சொன்னார், தற்போது தமிழகத்திற்கு வந்த பிறகு அரசியலில் தமிழகத்திற்காக உழைப்பேன் என்று சொல்கிறார். நேரத்திற்கு தகுந்தார் போல் பேசுபவர் அண்ணாமலை. சட்ட விதிமுறைகளை மீறுகின்ற வகையில் அநாகரிகமாக மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கொடியேற்றினால் அது கண்டிக்கப்பட வேண்டும், தடுத்து நிறுத்தப்படவேண்டும். அது எந்த அரசியல் கட்சி கொடியாக இருந்தாலும் ஏற்றக்கூடாது” என்றார்.