"காங்கிரஸ் கட்சி நமது நாட்டு மக்களை சோம்பேறிகளாகப் பார்க்கிறார்கள்" - அண்ணாமலை விமர்சனம்!!

 
Annamalai

பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக யார் வேட்பாளராக நின்றாலும், அவர் பெயர் நரேந்திர மோடி என எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பக்கத்தில், " கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று அடுத்த நான்கு ஆண்டுகளில், 2028 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். இன்றைய தினம், பாராளுமன்றத்தில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் பேசுகையில், காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது என்று கூறினார். 

Annamalai

ஆர் என்றால் அத்தி மரங்கள். அத்தி மரங்கள் அதிகமாக இருந்த காடு என்பதால் ஆற்காடு என்ற பெயர் பெற்றது. 1100 ஆண்டுகள் பழமையான வரதராஜர் கோவில், வடராமேஸ்வரம் ராம நாதேஸ்வரர் கோவில் என ஆன்மீகம் பெருகும் மண். 110 ஆண்டுகளாக துல்லியமாகக் கணக்கிடும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் இந்தப் பகுதியின் சிறப்பு. தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை பற்றியும், இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றியும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது சிறப்புக்குரியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவாக இன்னும் 30 ஆண்டுகள், அதாவது 2044 ஆம் ஆண்டு வரை தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் பாஜக ஆட்சியில், ஒன்பது ஆண்டுகளில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியிருக்கிறோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று அடுத்த நான்கு ஆண்டுகளில், 2028 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும். இன்றைய தினம், பாராளுமன்றத்தில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் பேசுகையில், காங்கிரஸ் கட்சி முப்பது ஆண்டுகளில் வைத்த இலக்கை, பாஜக ஆட்சியில், நமது நாடு 14 ஆண்டுகளில் அடையப் போகிறது என்று கூறினார். 

நமது பிரதமர் அவர்களின் கனவு மிகப் பெரியது. நமது நாட்டை வல்லரசாக்க, ஏழை மக்கள் அனைவரும் முன்னேற, இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக மாற, மத்திய அரசின் திட்டங்களும், பணிகளும் நேரடியாக மக்களைச் சென்று சேர்ந்திட வேண்டும் என்று விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியின் 60 ஆண்டு கால ஆட்சிக்கும், பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு, பாஜகவின் எண்ணம், சிந்தனை, கனவு, இலக்கு உழைப்பு, மக்கள் வைத்திருக்கும் அன்பு என அனைத்தும் பெரிது. அதனால்தான் முடியாது என்று இத்தனை ஆண்டுகளாக நினைத்திருந்தவற்றை எல்லாம் முடித்துக் காட்டியிருக்கிறோம். 

annamalai

கடந்த 2014 ஆம் ஆண்டு, 283 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்த நமது பிரதமர் அவர்கள், தமது நல்லாட்சியால், 2019 ஆம் ஆண்டு 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றார். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், நாட்டு மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, நமது மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு  @narendramodi  அவர்கள் மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. பாஜகவில் மட்டும்தான் சாமானிய மக்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு வர முடிகிறது. தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு, மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் சாமானிய மக்கள், இளைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். நமது பிரதமரின் குரல், பாஜகவின் குரல் இன்று சாமானிய மக்களைப் பிரதிபலிக்கிறது. 

பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதன்முதலாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நமது பிரதமர் அவர்கள் அமைச்சரவையில், மொத்தம் 76 அமைச்சர்களில், 12 பேர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். 8 பேர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 25% க்கும் அதிகமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மையான சமூக நீதி. ஆனால் போலி சமூக நீதி பேசிக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில், வெறும் 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நமது பிரதமர் இன்று பேசுகையில், காங்கிரஸ் கட்சி இனி எதிர்க்கட்சி வரிசையில் கூட இருக்க முடியாது. பாராளுமன்றப் பார்வையாளர் இருக்கையில் மட்டுமே அமர வைக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இதுதான் நிலை என்று கூறியிருந்தார். 



காங்கிரஸ் கட்சி நமது நாட்டு மக்களை சோம்பேறிகளாகப் பார்க்கிறார்கள். முன்னாள் பிரதமர் நேரு அவர்கள், இந்திய மக்கள் சோம்பேறிகள், எனவே நாட்டின் வளர்ச்சி விரைவாக வராது என்று கூறினார். ஆனால் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  @narendramodi அவர்கள் ஒவ்வொரு முடிவையும் மக்களின் உழைப்பை நம்பியே எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று சொன்னபோது, முன்னாள் நிதியமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள், அது சாத்தியமில்லை என்று கூறினார். இன்று உலக நாடுகளின் அனைத்திலும் நடக்கும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் 54% இந்தியாவில் மட்டுமே நடக்கின்றன. மற்ற உலக நாடுகள் அனைத்தும் சேர்த்துத்தான் 46% பணப்பரிவர்த்தனை நடக்கிறது. காஷ்மீரில் ஆர்டிகிள் 370, அயோத்தி ராமர் கோவில் என எவற்றையெல்லாம் காங்கிரஸ் கட்சி முடியாது என்று சொன்னதோ அவை அனைத்தும் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தைரியமான முடிவுகளால் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆற்காடு மக்களின் நெடு நாள் கோரிக்கையான நகரியிலிருந்து திண்டிவனத்துக்கு ரயில் போக்குவரத்துக்காக, பாஜகவினரின் வேண்டுகோளின்படி, இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும். 

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக யார் வேட்பாளராக நின்றாலும், அவர் பெயர் நரேந்திர மோடி என எண்ணி மக்கள் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள் முன்னேற, நம் குழந்தைகள் எதிர்காலத்துக்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் நமது பிரதமர் கரங்களுக்கு வலு சேர்ப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.