200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

தொழிலாளர் தினத்தை கொண்டாடும் விதமாக  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்திருக்கும் மே தின  நினைவுச் சின்னத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இன்னும் இரண்டு தினங்கள் தான் உள்ளது, மக்கள் முடிவை விரைவில் காண்போம். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி  மகத்தான கூட்டணி. மோடி இங்கு வந்தால் தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என புகழ்ந்து பேசுவார். ஆனால் பீகாருக்கு சென்றால் தமிழர்களை திட்டி பேசுவார். எனவே அவர் தான் நமது பிரதமர்... மேலும் தமிழ்நாடு மக்கள் தெளிவாக உள்ளனர், பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் இடமில்லை. ஐடி ரைட் குறித்து மேலும் ஆதாரங்களை விரைவில் தொடர்ச்சியாக வெளியிடப்படும்” என்றார்.