“காங்கிரஸில் உட்கட்சிப் பிரச்சனை இருப்பது உண்மைதான்”- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரஸில் உட்கட்சிப் பிரச்சனை இருப்பது உண்மைதான்”- செல்வப்பெருந்தகை “காங்கிரஸில் உட்கட்சிப் பிரச்சனை இருப்பது உண்மைதான்”- செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக கவலை தெரிவித்த ஜோதிமணி குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

ச்

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை கூறுகையில், “கையில் ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருப்பினும் அனைவரையும் அரவணைத்தே செல்கிறேன். தேர்தல் படிவம் மற்றும் முகவர்கள் போடுவது தொடர்பாக பிரச்சனை இருந்தது உண்மைதான். அதை தீர்த்து வைத்தாயிற்று. கரூர் மாவட்ட காங்கிரஸில் உட்கட்சிப் பிரச்சனை இருப்பது உண்மைதான். அதுபற்றி ஜோதிமணி குற்றம் சாட்டியபோது என்னாலான நடவடிக்கையை எடுத்தேன். ஆனால் ஜோதிமணி பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் குற்றம் சாட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு உட்பட அதிகாரத்தின்படியே செயல்படுகிறேன். ஜோதிமணி எக்ஸ் பதிவில் அவர் தான் பதிவிட்டாரா என்று  எனக்கு சந்தேகம் இருக்கிறது” என்றார்.

முன்னதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “தமிழ்நாடு காங்கிரஸில், எவ்வித கட்டுப்பாடற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.