“அடுத்த 2, 3 நாட்களில் திமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை"- காங்கிரஸ்
Feb 2, 2026, 18:05 IST1770035720359
அடுத்த 2, 3 நாட்களில் திமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “இன்னும் இரு தினங்களில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச உள்ளோம். அடுத்த 2, 3 நாட்களில் திமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். கூட்டணி குறித்து திமுக எம்.பி கனிமொழியுடன் தொலைபேசியில் பேசினேன்” என்றார்.


