பாஜக செயலாளரை கொல்ல சதியா?- காவல்துறை மறுப்பு

 
ச்

தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தத்தை கொல்ல, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சதி செய்ததாக செய்தி வெளியான நிலையில், அதற்கு திருப்பூர் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருப்பூர் மாநகரில் கடந்த 24.09.2024 ம் தேதி தெற்கு காவல் நிலைய பகுதியில் எல்லைக்குட்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு பங்களாதேஷ் நாட்டினரும், 25.09.2024 ம் தேதி நிலைய காவல் அனுப்பர்பாளையம் பங்களாதேஷ் நாட்டினரும் மற்றும் 29.09.2024 ம் தேதி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று பங்களாதேஷ் நாட்டினரும், முறையான அனுமதி பெறாமல் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த காரணத்திற்காகதான் 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட 13 பங்களாதேஷ் நாட்டினரையும் விசாரணை செய்தபோது அனைவரும் தாங்கள் திருப்பூர் மாநகர பகுதிக்குள் வேலை தேடி மட்டுமே வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்தனர். கடந்த 09.10.2024 அன்று நாளிதழிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்பட்ட "பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் முருகனந்தத்தை கொல்ல நடந்த சதி அம்பலம்! கைதான வங்கதேச ஆசாமிகள் வாக்குமூலத்தால் பரபரப்பு!!" என்ற செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும்” எனக் குறிப்பிடப்ப்டடுள்ளது.