செங்கல்பட்டு நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

 
gh

செங்கல்பட்டு நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நகரத்தின் மத்தியில் பேருந்து நிலையம் உள்ளதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுதுவாக புகார் இருந்தது. போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.  புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நேதாஜி நகர் பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டது.  அமைச்சர்கள்  முத்துசாமி,  அன்பரசன் ஆகியோர் இந்த இடத்தை கடந்த மாதம் நேரில் ஆய்வு செய்தனர்.  புதிய பேருந்து நிலையத்திற்கான வரைபடத்தை பார்வையிட்டதோடு மேற்கொண்டு நடைபெற உள்ள பணிகள் குறித்தும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

rb

இந்நிலையில் செங்கல்பட்டு நேதாஜி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். அமைச்சர்களிடம் முறையிட சென்ற பொதுமக்களை காவல்துறையினர்  தடுத்து நிறுத்திய நிலையில் நேதாஜி நகர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

tn

நேதாஜிநகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களை அகற்ற முயற்சி என புகார் கூறும் அப்பகுதிவாசிகள் பேருந்து நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தினால் தங்களுக்கு மாற்ற இடம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.