முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

 
stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடர்பாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

arivalayam

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர்" அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் தமிழ்நாடு முழுவதும் நடத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின்  தலைமையில், இன்று காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

stalin

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.இக்கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் - அனைத்து அணிச் செயலாளர்கள் - அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.