குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி

 
rn ravi

தமிழகத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image


அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், தமிழகத்தில் இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 'ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது' என குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக பாஜகவினர் சர்ச்சையை கிளப்பிவருகின்றனர். 

முன்னதாக சனாதனம் குறித்து பேசியவர்கள், தற்போது அமைதியாகி விட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார்.