காரைக்காலில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

 
corona

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமி ஒரே நாளில் இந்தியாவில் 3016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். இதேபோல் நேற்று முன் தினம்  ஒரே நாளில் இந்தியாவில் 3094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.