நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா உறுதி!

 
இன்னசென்ட் திவ்யா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 20ஆக உள்ளது. பாதிப்பு குறைந்திருந்தாலும் ஆட்சியர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. 

இன்னசென்ட் திவ்யா

அந்த வகையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாவுக்கு கொரோனா உறுதியானது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓணம் பண்டிகைக்காக அவர் கேரள மாநிலத்திற்கு சென்று வந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவரும் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். பிறகு, அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.

இதன் காரணமாக அவர் பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆட்சியரை தொடர்பு கொண்ட போதே அவருக்கு கொரோனா உறுதியானது தெரியவந்தது. இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் அவரது மகனுக்கு கொரோனா பாதித்த நிலையில் இன்று அவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.