"கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உறுதி!!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

கொரானா தொற்று 3 ம் அலை அதிகமாக பரவி வருவதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என ஒய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் என்பவர் உய்ரநீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் தெருக்களில் நோயின் தாக்கம் அதிகரித்து மூடப்பட்டிப்பதால் நகர் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் நோயின் தாக்கம் கூடுதல் ஆகும்.இதுவரை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடவில்லை . தான் அரசியல் வாதி இல்லை மக்கள் நலன் கருதும் மருத்துவர் என்பதால் தான் நகர்புற தேர்தலை இந்த சூழலில் நடத்த வேண்டாம் என்கிறோம். தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 17 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதியும் அதிகரிக்கிறது என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் முடிக்க கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அறிவிப்பை வரும் 26 ம் தேதிக்கு முன்னர் வெளியிட வேண்டியுள்ளது - என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரானா பாதுகாப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றிநகர்புற உள்ளாட்சி தேர்த வேட்புமனுக்களை பெறுவதில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலை இதன்படி தான் அரசு நடத்தியது என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்புற தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் விளக்கமளித்துள்ளது.


