பேருந்துகளுக்கிடையே சிக்கி... கைக்குழந்தையுடன் நூழிலையில் உயிர் தப்பிய தம்பதி!

 
ttn

புதுச்சேரி அருகே கைக்குழந்தையுடன் இரண்டு பேருந்துகளுக்கிடையே சிக்கிய தம்பதி உயிர் பிழைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிதானமாக சிக்னலில் நிற்காமல் வாகனங்களை முந்திச் செல்வதால் தினமும் விபத்துகள் நேரிடுகின்றன. பலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. சமீப காலமாக சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ttb

இந்த நிலையில், புதுச்சேரி அருகே கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு தம்பதி இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரி அருகே உள்ள கல்மண்டபம் கிராமத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அந்த வழியாக மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்றுக் கொண்டிருந்துள்ளார். பேருந்தை முந்திச் செல்ல அவர் முயன்ற போது, எதிர்த்திசையில் பேருந்து ஒன்று வந்ததால் இரண்டு பேருந்துகளில் சக்கரத்திற்கு இடையே அவரது இருசக்கர வாகனம் சிக்கிக்கொண்டது. ஆனால், குழந்தை உட்பட மூவரும் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.