#BREAKING "லியோ 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

 
tn

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ம் தேதி உலகம் முழுவதும் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ளது.

leo

லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு காலை 4 மணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் செவன் கிரீன் ஸ்டுடியோ முறையீடு செய்தது.  இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று  விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்து இருந்தார். 

leo

இந்த சூழலில்  'லியோ' பட சிறப்பு காட்சி தொடர்பாக பட நிறுவனம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் LEO படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதனை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.