செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டிப்பு
Mar 13, 2024, 14:43 IST1710321232280
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதுவரை 25முறை நீட்டிக்கப்பட்டு இருந்தது.



