செந்தில் பாலாஜியின் சிறைவாசத்திற்கு இல்லையா என்ட் - 35வது முறையாக நீட்டிப்பு!!
Updated: Apr 25, 2024, 15:41 IST1714039888944
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் இன்று சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை ஏப். 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.