சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 
ஈரோடு: சீமை கருவேல மரங்களை அகற்ற நவ.18-இல் பொது ஏலம் அறிவிப்பு

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கை வகுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் மரங்களை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சீமைக் கருவேல மரங்கள் வரமா? சாபமா? உயிராபத்தை மீறி நடக்கும் கரிமூட்ட தொழில்  - கள நிலவரம் - BBC News தமிழ்

தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.இந்த வழக்குகள் சிறப்பு அமர்வு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக டெண்டர்கள் கோரலாம் என யோசனை தெரிவித்தனர். சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, தமிழக அரசு கொள்கைகள் வகுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என தெரிவித்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் உத்தரவிடலாம் என்றும் தெரிவித்தனர்.

SC Collegium Recommends Names Of Five Advocates And Three Judicial Officers  As Judges Of Madras High Court

சீமை கருவேல மரங்கள் இல்லாத கிராமம் என ஒரு கிராமத்தை அடையாளம் காட்ட முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மரங்களை எப்படி, எப்போது அகற்றப் போகிறீர்கள் என்பது குறித்து, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அடங்கிய உயர்மட்ட கூட்டத்தைக் கூட்டி, திட்டம் வகுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.