நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவு!

 
nayanthara nayanthara

நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை நயன் தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நயன் தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன் தாரா. நடிகை நயன் தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கல்யாண ஆவண படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டது. இதனிடையே அந்த திருமண ஆவண படத்தில் நானும் ரௌடி தான் படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில், நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை நயன் தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.  நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜனவரி 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.