வீர தீர சூரன் பட நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்க - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
court

வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. படத்திற்கு நிதி வழங்கியதால் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டம் என Ivy entertainment வழக்கு தொடர்ந்தது. இன்று வெளியாகவிருந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.