இனி அறிக்கை விடக்கூடாது - ஆர்த்தி, ரவி மோகனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
arthi ravi arthi ravi

பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார். ஜெயம் ரவி என்ற தனது பெயரையும் ரவி மோகன் என மாற்றினார்.  இதுதொடர்பாக ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான் என கூறினார். விவாகரத்து வழக்கில் நடிகர் ரவி மோகன் -ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.  இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.  

இந்த நிலையில், பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர். ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.