கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

 
ntk covai

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என கூறி கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறி வருவது அக்கட்சியில் தலைவர் சீமானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் ராமச்சந்திரன், சீமானின் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிருப்தியை தருவதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அருந்ததியர் சமூகத்தினர் குறித்த சீமானின் பேச்சு களத்தில் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.