ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டது எப்படி?

 
Covai Police

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் ஜோஸ் ஆலுகாஸ்நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவில் கொள்ள சம்பவம் நடந்தது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுகாஸ் சார்பில் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தத்னர்.  நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கணவன் மனைவி இணைந்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமானது. தர்மபுரியைச் சேர்ந்த விஜய் மற்றும் அவரது மனைவி கொள்ளை சம்பவத்தில் இணைந்து ஈடுபட்டுள்ளனர். மனைவி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து  நகைகள் கைப்பற்றப்பட்டன. இதனிடையே நேற்று முக்கிய குற்றவாளியான விஜய் கைது செய்யப்பட்டார். சென்னையில் பதுங்கியிருந்த விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

jos alukas

இந்த நிலையில், கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் சென்னை கோயம்பேடு அருகே செல்போன் சிம் வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5.15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மாலை அணிந்து பக்தர் போல வேடமிட்டு சுற்றி திரிந்த விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு கூறினார்.