தீயில் குதித்த மாடுகள்- விநோத நேர்த்திக்கடன்

 
ச் ச்

கர்நாடகாவில் கொளுந்து விட்டு எரியும் தீயில் மாடுகளை தாண்ட விட்டு மக்கள் வினோத நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். 

Kichchu Haisodu is a ritual part of Makara Sankranti in Rural areas (also  few parts of Bengaluru) where the livestock and farmers jump through the  fire. — This happens in Mandya, villages

தமிழக கர்நாடக எல்லையில் சங்கராந்தி  பண்டிகையை முன்னிட்டு, கொளுந்து விட்டு எரியும் தீக்குண்டத்தில் மாடுகளை தாண்ட விட்டு கிராம மக்கள் விநோத நேர்த்தி கடன் செலுத்தினர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட ஹனூர் அருகே உள்ள பசப்பனதொட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து வரும் மாட்டுப்பொங்கல் தினத்தை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பண்டிகை கொண்டாடிய கிராம மக்கள், மாடுகளை குளிப்பாட்டி மலர்மாலை அணிவித்து அலங்கரித்து அழைத்து வந்தனர். பின்னர், ஊரின் மையப்பகுதியில் விறகுகளை எரித்து தீ குண்டம் உருவாக்கிய அவர்கள், தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதும்  ஒவ்வொருவராக தங்களது மாடுகளை பிடித்து வந்து தீக்குண்டத்தை தாண்டினர். 

இது போல் செய்வதால் கால்நடைகள் நோய் நொடியின்றி ஆரோக்யமாக இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை பசவனதொட்டி மட்டுமன்றி சுற்றுபகுதி கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தீக்குண்டத்தில் தாண்டி வர செய்து நேர்த்தி கடன் செய்தனர்.