#BREAKING தவெகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
தமிழகத்தில் அமையவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சென்னை தி நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் வருகை தந்தார். அவரிடம் இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ ஆதரவு கடிதத்தினை கொடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.த.வெ.க ஆட்சி அமைக்க நிபந்தனைகளற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களை சேர்த்து த.வெ.கவை ஆதரவளிக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. தளி, திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் சி.பி.ஐ வெற்றி பெற்றிருந்தது.
இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள சி.பி.ஐ. பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, "எங்களது நட்பு ரீதியான கட்சிகளான சிபிஐ மற்றும் விசிக ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, நாங்கள் ஒரு முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளோம். இதன் விளைவாக செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த முட்டுக்கட்டை தவிர்க்கப்பட்டு, தமிழக மக்கள் வழங்கிய ஒட்டுமொத்தத் தீர்ப்பை மதிக்க முடியும். தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க முடிய வேண்டும். அதற்கு என்ன தேவையோ அது குறித்து இந்த மூன்று கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன" என்றார்.

