ஆளுநர் ரவி கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்- முத்தரசன்

 
முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்,  வேறு ஏதும் கூற இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை பகல் கனவு காண்கிறார்  - முத்தரசன் விமர்சனம்.. 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் “தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. கோவை ஈசா அறக்கட்டளையின் யோகா மையத்தில் பெண்களுக்கு எதிதாக தவறுகள் நடப்பதாக புகார் வருகிறது. அதன்  நிறுவனர் மீது வழக்கு உள்ளது. அங்கு நன்கு படித்த பெண்கள் மூளை சலவை செய்யப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பேராசிரியர் காமராஜ் வழக்கில் கூட  நீதிமன்றமே பல்வேறு கேள்வி கேட்டது. மேலும் விசாரிக்க கோரியது. பழங்குடியின மக்களின் நிலங்கள் சட்ட விரோதமாக பெறப்பட்டத்காக புகார் வருகிறது. இங்கு பிரதமர், குடியரசு தலைவர், பாஜக முதலமைச்சர்கள்,  நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். நீர் வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. நீதிமன்றம் இம்மாதிரியான ஆக்கிரமிப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது. ஈஷா யோகா மையம் மீது பொது விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் அங்குள்ள பெண் குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிறுவனர் மீது தயக்கம் இன்றி உரிய நடவடிம்கை எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையத்தை இதனை கண்டித்து சிவானந்தா காலணியில் 23 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதற்கு சிபிஐ முழு ஆதரவு. 

ஆர்.என்.ரவியின் பேச்சு அறியாமையின் உச்சம் - முத்தரசன் கண்டனம்..

விமான நிலையங்களையும், நிலங்களையும் தனியாருக்கு விடப்படுகிறது.  விரிவாக்கம் தேவை மாற்று கருத்து இல்லை, ஆனால் விவசாயிகள் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும், கைப்பற்றுவதை தவிர்க்க வேண்டும். வளர்ச்சி தேவை விவசாயி பாதுகாப்பும் தேவை.  ஜக்கி வாசுதேவை கைது செய்ய வேண்டும். அவரை ஒன்றிய அரசு காப்பாற்றுகிறது. மணிப்பூரை பார்க்க பிரதமருக்கு நேரம் இல்லை. ஆனால் பிரதமர் ஈஷாவிற்காக கோவை வருகிறார். ஒன்றிய அரசின் நிர்பந்தங்களுக்கு மாநில அரசு பணியக்கூடாது. சென்னை கீழ்பாக்கம்  மருத்துவமனையில் இருக்க வேண்டியவர் ஆளுநர் ரவி. திருவள்ளுவரை சிறுமைப்படுத்து முயற்சி, பாரத், இந்தி, சமஸ்கிரதம் திணிப்பு என தொடர்கிறார்.  பல முறை சர்ச்சைக்குறிய கருத்தை கூறி அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற பேசுகிறார். இந்தியா கம்யூனிஸ்ட்  கட்சி திமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது. எந்த குழப்பமும் இல்லை” என்றார்.