தவெகவிற்கு ஆதரவு அளித்தது ஏன்?- சண்முகம் பேட்டி
விஜய் ஆட்சியமைக்க கூடாது என ஸ்டாலின் எங்கேயும் சொல்லவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியமைய வேண்டியது அவசியம் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரிகள் ஆதரவளிக்கிறோம். குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என ஆளுநர் எச்சரித்திருப்பது ஆபத்தானது. தமிழகம் இன்னோர் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. அதனால், த.வெ.க கட்சி அரசு அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளோம். அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். வெளியிலிருந்து ஆதரவு அளிப்போம். விஜய் ஆட்சியமைக்க கூடாது என ஸ்டாலின் எங்கேயும் சொல்லவில்லை. திமுகவுடன் தொடந்து பயணிப்போம். கொள்ளைப்புறம் வழியாக பாஜக ஆட்சி தமிழகத்தில் அமைவதை தடுக்கவே தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளொம். தவெக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம், வெளியில் இருந்து தான் ஆதரவு அளிப்போம். தவெகவுக்கு தருவது ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல, மாநிலத்தின் பிரச்னைகளில் திமுகவுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஆட்சி அமைக்க அழைக்க தாமதப்படுத்தும் ஆளுநரை விஜய் கண்டிக்க வேண்டும். வருங்காலங்களில் தமிழக உரிமைகளுக்காக விஜய் குரல் எழுப்ப வேண்டும். அதற்கு இடதுசாரிகள் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

