போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரனும் - சிபிஎம் சண்முகம் வேண்டுகோள்..!
பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வேண்டுகோள் விருத்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேரடியாக சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 10 நாளாக போராடி வருகின்றனர். இந்த சுமுகமான முறையில் நியாயமான கோரிகை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது. அமைச்சர் பேச்சு வார்த்தை குறித்து கூறினார். பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் முடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும்.

தனியார் மையம் என்பது நாடு முழுவதும் நடைபெறும். தமிழகத்திலும் பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே இருக்கும் உரிமையை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் இதற்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்ளவோம். சாம்சங் விவகாரத்தில் 36 நாட்கள் போராடி உரிமையை பெற்றோம். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்க வேண்டும் என்பதையே அரசிடம் நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தல் வாக்குறுதி கொடுத்ததை மட்டுமே அரசு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தற்போது போராடும் கோரிக்கைகளை ஆக்க பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.


