காவிரி ஆற்றில் முதலை - வனத்துறை எச்சரிக்கை

 
cauvery river

காவிரியாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வீடியோ வெளியான நிலையில் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

tnf

சிந்தாமணி பகுதி ஆற்றில் மீன் பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட வன அலுவலர் கிரண் விடுத்துள்ள எச்சரிக்கையில்,  காவிரி ஆற்றின் மையப்பகுதியில் முதலை இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்.  காவிரி ஆற்றில் சிலர் மீன்பிடிப்பதாக தெரிகிறது.  மீன்பிடிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

tn

மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆட்டு இறைச்சி ,கோழி இறைச்சி மற்றும் மீந்து போன உணவுகளை ஆற்றில் வீச வேண்டாம்.  வீசினால் உணவு கிடைப்பதை முதலை  மோப்பம் பிடித்து கரையேறி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.  முதலையை கண்காணித்து வருகிறோம்.  பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில்,  படித்துறைகளில் நடமாடினால் முதலையைப் பிடித்து வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.