''ரூ.41 க்கு மின்சாரக் கொள்முதல் இல்லை"- நிர்மல்குமார்

 
ctr Nirmalkumar tweet

யூனிட் ரூ.41க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில், "ரூ.37 முதல் ரூ.41 வரையிலான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்யப் போவதில்லை. இன்று டெண்டர் திறக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான மின்சாரத்தைச் சமாளிக்க போதுமான மின்சாரம் நம்மிடம் உள்ளது. அடுத்த கோடைக்காலத் தேவைக்காக முன்கூட்டியே மின்சாரத்தைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விலைகள் நியாயமற்றவை. இதற்கிடையே, அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நடுத்தர மற்றும் நீண்டகால டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, இனி அதிக விலை கொடுத்து எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யப் போவதில்லை. கீழே குறிப்பிடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்யவும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.