கடலூர் திமுக எம்.எல்.ஏ., கோ.அய்யப்பன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்.. - துரைமுருகன் அறிவிப்பு..

 
அறிவாலயம்


கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கடலூர் எம்.எல்.ஏ.,  கோ. அய்யப்பன்  கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் நீக்கப்பட்டு வருகின்றனர்.  கட்சியில் தங்களுக்கு சீட் கொடுக்காததால் மாற்றுக்கு கட்சிக்கு தாவியது, கூட்டணிக் கட்சி வேட்பாளாருக்கு எதிராகவே போட்டியிடுவது, சுயேட்சையாக போட்டிட்டது என பல்வேறு காரணங்களால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

துரைமுருகன்

அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற  மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.  பல இடங்களை தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியிருந்த  இடங்களில்  திமு.க.வினரே போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளார்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இந்நிலையில் தற்போது  கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட  உடந்தையாக இருந்தவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கடலூர் எம்.எல்.ஏ கோ.அய்யப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் திமுக எம்.எல்.ஏ., கோ.அய்யப்பன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்.. -  துரைமுருகன் அறிவிப்பு..

இதுகுறித்து  தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.  “கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.