கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா - அலுவலக ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

 
tn

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும்  நோக்கில் சுகாதாரத்துறை  துரிதமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் 30,208 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 64ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.  அதேபோல் இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 264ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 20ஆயிரத்து 457ஆக அதிகரித்துள்ளது.

corona

அந்த வகையில் முன்கள பணியாற்றி வரும் சுகாதார பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவலர்கள் என பலரும் தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடலூர்  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்  தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.  இதனால் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் , அலுவலக ஊழியர்கள் பரிசோதனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ttn

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கடலூர் மாவட்டம் கம்மாபுரத்தை சேர்ந்த 78 வயது முதியவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.