பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - டிடிவி தினகரன் இரங்கல்!!

 
ttv

கடலூர்  பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது என்று டிடிவி  தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

கடலூர்  எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதில்  சித்ரா(35), அம்பிகா(50), சத்தியராஜ்(34) ஆகிய  3தொழிலாளர்கள் தீவிபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேய பலியாகினர். இதை தொடர்ந்து  ராஜி, வசந்தா ஆகிய இருவர் விபத்தில் சிக்கி  படுகாயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில் வசந்தா(45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, M.புதூர் பகுதியில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  தொடர்கதையாகிவரும் பட்டாசு ஆலை விபத்துகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய உயிரிழப்புகளை நிறுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.