"நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

stalin

நான்கு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் இதில்  பங்கேற்றுள்ளனர்.

mk stalin

இந்நிலையில் நாவலூர் சாலையில் சுங்க கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட மாட்டாது என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால்,  நாவலூரில் நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.