சென்னையை நெருங்கும் டிட்வா புயல்

 
5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம் 5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது.

வங்கக்கடலில் ’டிட்வா’ புயல் உருவாகி உள்ளது. இந்த புயலால் தமிழ்நாடு கடற்கரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபோல் அதிகப்படியான கனமழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபோல் அதிகப்படியான கனமழை பெய்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புயல் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதியில் கரையை கடந்தால் அதன் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்படும். மேலும் மரங்கள் விழுந்து, சாலைகளும் துண்டிக்கப்படும். 

இந்நிலையில் டிட்வா புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும் வேதாரண்யத்திற்கு 80 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 190 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலுக்கு 100 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் கரையை கடக்காது, கடலிலேயே வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.